வர்த்தக சங்கத்தில் இணைய அழைப்பு
மதுரை, சிக்கந்தர் சாவடியில் Agro Food Trade Centre
-ல் சிறப்பாக செயல்பட்டு
வரும்
வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம்
நம் நாட்டில் வேளாண் உணவு உற்பத்தி மற்றும் தொழில் வர்த்தகத்தின் முன்னேற்றத்தை
முன்னிலைப்படுத்தி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
(GROSS DOMESTIC PRODUCT - GDP)
அதிகரிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு
வேளாண்துறை, தொழில்துறை, சேவைத்துறை ஆகிய அனைத்துத்துறைகளின்
வளர்ச்சிக்காக செயல்பட்டுவரும் அமைப்பு இந்த வர்த்தக சங்கம்.
தொழில் வர்த்தக சங்கங்களின் முன்னோடி தலைவர் திரு S.இரத்தினவேல் அவர்களால்
நிறுவப்பெற்று அவர்களது தலைமையில் திறமையான இளம் நிர்வாகிகளுடன் செயல்பட்டு வரும்
வர்த்தக சங்கம்.
வேளாண் உணவுப் பொருட்களில் தொழில் வணிகம் செய்வோர் மட்டுமல்லாது, மக்களுக்கு
முழுமையான ஆரோக்கியமான உணவு (wholesome food) கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை
கொண்டுள்ளவர்கள் -தாங்கள் எந்தப் பொருட்களின் தொழில் வணிகத்தில் ஈடுபட்டிருந்தாலும்
Start-ups மற்றும் குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் வணிக நிறுவனங்கள்,
MSMEs & Large Organisations, ஏற்றுமதி, இறக்குமதி வணிக நிறுவனங்கள், வேளாண்மை
(Agriculture) மற்றும் சேவை நிறுவனங்கள் (Service Sector), தொழில் வர்த்தக
சங்கங்கள், உழவர் உற்பத்தி அமைப்புகள் (Farmer Producer Organisations - FPOS),
மற்றும் Professionals -இச்சங்கத்தில் இணைந்து பயன்பெறலாம்; நம் நாட்டின் பொருளாதார
முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள் தெரிவிக்கலாம். அனைத்துத் துறைகளுக்குமான முக்கிய
தகவல்கள் சுற்றறிக்கைகள், மாத இதழ், (Electronic Communication) ஆகியவற்றின்
வாயிலாக அங்கத்தினர்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்படும்.
அங்கத்தினர்களது தொழில், வணிகம், ஏற்றுமதி, இறக்குமதி, வேளாண்மை மற்றும் வரி
குறித்த பிரச்னைகளை மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள்
ஆகியவற்றின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு எடுத்துச் சென்று தக்க நிவாரணம்
பெற்றுத்தருவதோடு, தேவையான கட்டமைப்புகளை அமைப்பதிலும், பெற்றுத்தருவதிலும் முழுக் கவனம் செலுத்தும்
அமைப்பு இது. நமது சங்கத்தின் கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பல்வேறு திட்டங்களை கையில் எடுத்து
செயல்படுத்தி வருகிறோம்
புதிய வணிக சங்கங்களை உருவாக்கும் வர்த்தக சங்கம் இது:
இது ஒரு வித்தியாசமான தொழில் வர்த்தக சங்கமாக செயல்படுகிறது. படைப்பாற்றலுடன் கூடிய புதுமையான
கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் எங்களுடன் இணைந்து நேரடியாக பங்கெடுத்து செயல்பட அனுமதிக்கும்
சங்கம் இது. It is a Participatory Chamber. அதுமட்டுமல்ல எந்தத் தொழில் வர்த்தகத்தில்
ஈடுபட்டிருந்தாலும் தங்களுக்கெனத் தனியாக ஒரு வணிக சங்கம் ஏற்படுத்த விரும்புகிறவர்களுக்கு
அலுவலக வசதியும், கூட்டங்கள் நடத்துவதற்கான அரங்க வசதியும், ஒரு வணிக சங்கம் எப்படி தன்
அங்கத்தினர்களுக்கு பயனுள்ள முறையில் சேவையாற்ற முடியும் என்பதை விற்பன்னர்கள் மூலம் ஆலோசனை
பெறுவதற்கான வசதியும் கொடுத்து, வணிக சங்கத்தின் ஆரம்ப கால உருவாக்குதலுக்கும், வளர்ச்சிக்கும்,
வழிகாட்டும் சங்கமாகவும் வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம் செயலாற்றுகிறது.
This Chamber functions as an "Incubatation Centre" in establishing New Proactive Chambers.
Join Agro Food Chamber of Commerce and Industry today and be part of the journey towards
business excellence and growth.